ஜப்பானில் கனமழை காரணமாக 4 லட்சம் மக்கள் வெளியேற்றம்

ஜப்பானில் கனமழை காரணமாக 10-க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர், 4 லட்சம் மக்களை மீட்பு குழுவினர் மீட்டு பாதுகாப்பான இடத்துக்கு அப்புறப்படுத்தியுள்ளனர்.
ஜப்பானில் பசிபிக் பெருங்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ஃபுகுவாக்கா மற்றும் ஓதியா பகுதிகளில் தொடர்ந்து இரண்டாவது நாளாக கனமழை பெய்து வருகிறது.
இதையடுத்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பல வீடுகள் அடித்து செல்லப்பட்டுள்ளன இதில் 10 பேர் மாயமாகியுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட அந்நாட்டு அரசு 4 லட்சம் மக்களை வெளியேற்றி பாதுகாப்பாக அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதுவரை கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது. இந்த மழைக்கு இதுவரை 400 கோடி ரூபாய் மதிப்புடைய பொருட்கள் சேதம் அடைந்துள்ளது.
மீட்பு பணியில் போலீஸார், தீயணைப்பு வீரர்கள், ராணுவத்தினர் உட்பட 7500 பேர் ஈடுபட்டுள்ளனர். மேலும் 40 ஹெலிகாப்டர் மூலம் மக்களை மீட்பதாக அந்நாட்டு அரசு தகவல் வெளியிட்டுள்ளது.