30 ஆண்டுகளில் குழந்தைகளை ஆய்வகங்களில் வடிவமைத்து கொள்ளலாம் நிபுணர்கள்

child
30 ஆண்டுகளில் இனபெருக்க செக்ஸ் முடிவுக்கு வரும் என்றும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஆய்வகங்களில் வடிவமைத்து கொள்வார்கள் என நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.
ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் சட்டப் பள்ளியின் சட்டம் மற்றும் உயிர் அறிவியல் துறையின் இயக்குனர் ஹாங்க் கிரேலி கூறியதாவது:-

தம்பதிகள் தங்கள் டிஎன்ஏவை வைத்து ஆய்வகங்களில் கருக்களை வடிவமைத்து கொள்வார்கள்.பெண்ணின் தோல் செல்களை எடுத்து ஸ்டெம் செல்கள் உருவாக்க பயன்படுத்தலாம் பின்னர்  இறுதியில் கரு முட்டைகளை உருவாக்கலாம்.முட்டைகள் பின்னர் பல கருக்களை விளைவிக்கும்பின்னர் அதனை சோதனையிட்டு வல்லுநர்கள் எந்த நோய்களுக்கும் ஆளாகிறார்களா என சோதனை செய்கிறார்கள்.  இதை செய்வதன் மூலம், பெற்றோர்கள் குழந்தையின் முடி நிறம் மற்றும் கண் வண்ணம் போன்ற அம்சங்களை தேர்ந்து  எடுத்து கொள்ள முடியும்.

இந்த செயல்முறை தற்போதே சாத்தியம் என்றாலும், 30 ஆண்டுகளில் இது மிகவும் மலிவானதாகவும், நிறைய பேர் இதை செய்ய தயாராக இருப்பார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.