பங்களாதேஷ் பறக்கிறார் ஜனாதிபதி

மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்களாதேஷ் செல்லவுள்ளார்.

இந்த விஜயம் எதிர்வரும் 13ம் திகதி இடம்பெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஷின் தேசிய தின அணிவகுப்பில் ஜனாதிபதி பிரதம அதிதியாக கலந்து கொள்வதற்காக கடந்த மார்ச் மாதம் ஜனாதிபதி விஜயம் செய்ய முன்னர் திட்டமிடப்பட்டிருந்தது.

எனினும், அவர் குறித்த காலப்பகுதியில் ரஷ்யாவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டதால் பங்களாதேஷ் விஜயம் பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.