யாழ்.யோகாக்கலைக்கான புலம்பெயர் தமிழர் ஒன்றியத்தின் அனுசரனையுடன் யாழ்.யோகா உலகம் நடத்தும் மூன்றாவது சர்வதேச யோகா தின விழா நாளை நல்லூர் துர்க்கா மணி மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
யாழ். யோகா உலகம் இயக்குநர் எஸ்.உமாசுதன் தலைமையில் இடம்பெறவுள்ள குறித்த விழாவில் யாழ்.யோகா உலகம் ஆசிரியர் யோகேந்திரன் பிரசாத் எழுதிய பிராணாயாமமும் குண்டலினியும் என்ற நூல் வெளியிட்டு வைக்கப்படவுள்ளது.
மேலும், யாழ்ப்பாண பல்கலைக்கழகச் சித்த மருத்துவ மாணவர்களின் ‘சித்த யோக அசைவுகள்’ நிகழ்வும், யாழ். யோகா உலகம் ஆசிரியர் மற்றும் மாணவர்களின் யோகாச் சிறப்பு ஆற்றுகை, கலைஞர் கெளரவிப்பு என்பனவும் இடம்பெறும்.
குறித்த நிகழ்வில் யாழ்ப்பாண பல்கலைக்கழக உயர் பட்டப்படிப்புக்கள் பீடாதிபதி பேராசிரியர் குணசிங்கம் மிகுந்தன் குடும்பத்தினர் பிரதம விருந்தினராக கலந்து கொள்ளவுள்ளனர்.
அத்தோடு யாழ்ப்பாண பல்கலைக்கழக சித்த மருத்துவ அலகுத் தலைவர் வைத்தியர் விவியன் சத்தியசீலன் தெல்லிப்பளை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்த்தானத் தலைவர் செஞ்சொற்செல்வர் ஆறு. திருமுருகன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இந்து நாகரீகத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் சுகந்தினி முரளிதரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்த விழாவில் ஆர்வலர்கள் அனைவரையும் தவறாது கலந்து கொள்ளுமாறு யாழ். யோகா உலகம் இயக்குநர் எஸ். உமாசுதன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.