உடல் எடையை குறைக்கும் கொள்ளுக்கஞ்சி

தேவையான பொருட்கள் :

கொள்ளு – 3 மேசைக்கரண்டி
பாசிப்பருப்பு / பயத்தம்பருப்பு – 3/4 மேசைக்கரண்டி
பூண்டு – 3 பற்கள்
தேங்காய்த்துறுவல் – 1 மேசைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு.

செய்முறை :

* பூண்டை தட்டி வைக்கவும்.

* கொள்ளு, மற்றும் பயத்தம் பருப்பைத் தனித்தனியாக வறுத்து, ஆற வைத்து மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.

* குக்கரில் பொடித்த கொள்ளு, பாசிப்பருப்புடன் 3 கோப்பை தண்ணீர் விட்டு, நசுக்கிய பூண்டு, உப்பு சேர்த்து, 10 விசில் வைத்து இறக்கவும்.

* விசில் போனவுடன் குக்கர் மூடியை திறந்து தேங்காய்த்துறுவல் சேர்த்து கஞ்சியை பரிமாறவும்.

* சத்தான கொள்ளு கஞ்சி ரெடி.