பிரான்சில் வாழும் எமது உறவுகளுக்காக

பிரான்சில் வருடாந்த மாற்றங்களின் வரிசையில், இவ்வாண்டுக்கான (2017) மாற்றங்கள் தொடர்பிலான விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

பொதுப்போக்குவரத்து, சுகாதாரம், வாகனம், உதவித் தொகை என பல்வேறு விடயங்களில் ஏற்படுகின்றன. இம்மாற்றங்கள் யூலை 1ம் நாள் முதல் நடைமுறைக்கு வர இருக்கின்றன.

01- தலைநகர் பாரிசினை மையப்படுத்திய இல் டு பிரான்ஸ் பகுதிக்கான பொதுப்போக்குவரத்தின் (Navigo) மாதாந்த கட்டணம் 75 யூரோக்களாக உயர்கின்றது.

02- பாரிஸ் போன்ற குறிப்பிட்ட பகுதிகளுக்குள் உள்நுழையும் வாகனங்களுக்கான ஓட்டிகள்( Crit’AIR) கட்டாயமாக்கப்படுகின்றன. சுற்றாடலை மாசுபடுத்தும் வாகனங்களை கட்டுப்படுத்தும் பொருட்டு இது நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இதனை மீறுபவர்கள் 68 யுறோக்கள் வரை தண்டப்பணம் செலுத்த வேண்டும்.

03- இரட்டை அல்லது மூன்று சக்கர மோட்டார் வாகனங்களுக்கு இலக்கத்தகடு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 21 செ.மீ நீளம், 13 செ.மீ உயரம் கொண்டுள்ள குறித்த மோட்டார் வாகனங்கள் இதுவரை இலகுரக வாகனபட்டியலில் இருந்துள்ளது. இந்நிலையில், இப்புதிய நடைமுறையினை மீறுபவர்கள் 135 யுறோக்களை தண்டப்பணமாக செலுத்த வேண்டும்.

04- வேலையிழந்தவர்களுக்கான (Chomage) கொடுப்பனவு 0,65 வீதமாக உயர்கின்றது. இதன்பிரகாரம் 28.86 யுறோக்கள் நாளாந்த கொடுப்பனவாக மாறுகின்றது.

05- வேலை தேடுபவர்களுக்கான நாளாந்த உதவித்தொகை (ARE) 11.84 யுறோக்களாக மாறுகின்றது.

06- ஓய்வூதியத்துக்கான முன்னைய பரிவர்த்தனை மையங்கள் ஒருமுகப்படுத்தப்பட்டு, ஒரு மையத்தின் ஊடாக இனிவரும் காலங்களில் ஒருவருக்கான ஓயவூதியம் மதிப்பீடு செய்யப்படும்.