கூகுள் நிறுவனம் தன்னை இணைய உலகில் ஒரு உச்ச நிலையில் நிலைநிறுத்தியுள்ளது.

இதனால் பல விஷப்பரீட்சைகளில் அசால்டாக இறங்கி வெற்றிவாகை சூடியுள்ளது.

இந்நிறுவனத்தின் புதிய முயற்சியாக யூடியூப்பிற்கான Uptime அப்பிளிக்கேஷன் உருவாக்கப்பட்டுள்ளது.

யூடியூப்பில் வீடியோக்களை ஒருவர் பார்த்த பின்னர் அதனை ஷேர் செய்து நண்பர்களையும் பார்க்கச் செய்ய முடியும்.

அத்துடன் அவர்களின் கொமெண்ட்களை கேட்கவும் முடியும். ஆனால் இதனைச் செய்வதற்கு குறித்த அளவு நேரம் எடுக்கும்.

இதனை தவிர்ப்பதற்காக உருவாக்கப்பட்ட அப்பிளிக்கேஷனே Uptime ஆகும்.

இதன் ஊடாக அனைத்து நண்பர்களும் ஒரே நேரத்தில் குறித்த ஒரு வீடியோவை தமது மொபைல் சாதனங்கள் ஊடாக பார்த்து மகிழ முடியும்.

uptime