நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.
மக்கள் மத்தியிலும், சமூகவலைதளங்களிலும் இந்த நிகழ்ச்சி ஒரு விவாத பொருளாகவே தற்போது மாறியுள்ளது என கூறலாம்.
பிக் பாஸ் நிகழ்ச்சி முதன் முதலில் நெதர்லாந்து நாட்டில் கடந்த 1999ல் பிக் பிரதர் என்ற பெயருடன் அறிமுகம் ஆனது.
எண்டமால் என்னும் நிறுவனம் தான் பிக் பிரதரை முதன் முதலில் வழங்கியது.
அந்த காலகட்டத்திலேயே பிக் பிரதர் சூப்பர் ஹிட் ஆனதால் இந்நிகழ்ச்சி கடந்த 2000ல் பெரிய எதிர்பார்ப்புடன் லண்டன் மற்றும் அமெரிக்காவில் வெளியானது.
ஆனால், பிக் பிரதர் என்னும் அசல் நிகழ்ச்சியில் பெருமளவில் பிரபலங்கள் பங்கேற்க மாட்டார்கள். சாமானியர்கள் தான் ஒன்றாக ஒரே வீட்டில் தங்குவார்கள்.
இவர்கள் எப்படி பழகுகிறார்கள், நாட்களை கழிக்கிறார்கள் என்பதே நிகழ்ச்சியின் சிறப்பம்சமாகும்.
பின்னர், இந்தியாவில் இந்நிகழ்ச்சி பிக் பாஸ் என பெயர் மாற்றப்பட்டு கடந்த 2006ல் இந்தியில் வெளியானது.
இந்திய ரசிகர்கள் சாமானியர்களை திரையில் ரசிக்கமாட்டார்கள் என்ற அடிப்படையில் பிரபலங்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியாக இதை அறிமுகப்படுத்தினார்கள்.
ஆனால், சில சீசனில் பிரபலங்களை வைத்து ஆங்கில பிக் பிரதரும் நிகழ்ச்சியை நடத்தியது.
அப்படி கடந்த 2005ல் லண்டனில் நடந்த பிக் பிரதரில் இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி கலந்து கொண்டார்.
அப்போது சக போட்டியாளரான வெள்ளைக்காரர் ஒருவர் ஷில்பா ஷெட்டி மீது இனவேறுபாடு காட்டியதாக சர்ச்சை கிளம்பியது. ஆனால், இறுதியில் ஷில்பாவே அதில் வெற்றி பெற்றார்.
பொதுவாகவே பிக் பிரதரிலும், பிக் பாஸ் போலவே அதிகம் மார்க்கெட் இல்லாத பிரபலங்களும், நடிகர்களும் தான் கலந்து கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.