நடிகர் விக்ரம் படத்தில் திவ்யதர்ஷினி!!

நிகழ்ச்சி தொகுப்பாளராகி பெரிய திரைக்கு சென்றவர்கள் அதிகம் பேர் உண்டு. அதற்கு உதாரணமாக சிவகார்த்திகேயனை சொல்லலாம். சின்னத்திரையிலிருந்து தற்போது வெள்ளித்திரை வந்துள்ளார் டிடி என்னும் .

பவர் பாண்டி படத்தில் நட்புக்காக ஒரு சிறிய கதாபாத்திரத்தில் திவ்யதர்ஷினி நடித்திருந்தார். இப்படத்தை தொடர்ந்து தற்போது இவர் கௌதம் மேனன் இயக்கும் துருவ நட்சத்திரம் படத்திலும் நடிக்கவுள்ளாராம். இப்படத்தின் படப்பிடிப்பு இப்போது பல்கேரியாவில் நடந்து வருகின்றது. மேலும், டிடி முதன் முறையாக ஒரு முன்னணி நடிகரின் படத்தில் நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

விக்ரம்-கவுதம் மேனன் கூட்டணியில் கதாநாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ், ரித்து வர்மா ஆகியோர் நடித்து வருகின்றனர். பார்த்திபனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சிம்ரன், ராதிகா, சதீஷ், வம்சி, திவ்யதர்ஷினி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

dd2