தற்பொழுது நாடளாவிய ரீதியில் தபால் ஊழியர்கள் மேற்கொண்டுவரும் வேலைநிறுத்தம் காரணமாக பொது மக்களுக்கு ஏற்படும் சிரமத்தைக் கருத்தில் கொண்டு, ஸ்ரீலங்காப் பொலிஸார் ஸ்பொட் அபராதம் செலுத்துவதற்கான காலத்தை ஒருவாரம் நீடித்துள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பிரிவு வழங்கிய தகவலின்படி, வாகன சாரதிகள் தமது அபராதத்தை ஒவ்வொரு பிரதேச செயலகங்களிலும் விசேடமாக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு கவுண்டர்களில் செலுத்த முடியும்.
அத்துடன் அபராதம் செலுத்தும் இறுதி நாள் இன்று என இருப்பின், குறிப்பிட்ட காவல் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவின் பொலிஸ் பொறுப்பதிகாரியினால் மாற்றப்பட வேண்டும். என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.







