புதிய அரசியலைப்பு தொடர்பாக சிவில்சமூக அமைப்புக்களைஅறிவூட்டல்

புதிய அரசியலமைப்பினைத் தயாரித்தல் தொடர்பாகப் பொதுமக்களுக்கு அறிவூட்டும் நிகழ்ச்சித் திட்டத்திற்கான அலுவலகத்தின் ஒழுங்குபடுத்தலில் புதிய அரசியலைப்பினைத் தயாரித்தல் தொடர்பாக சிவில் சமூக அமைப்புக்களை அறிவூட்டும் கருத்தரங்கு நாளை புதன்கிழமை காலை-09 மணி முதல் யாழ். மாவட்டச் செயலகத்தில் இடம்பெறவுள்ளது.

புதிய அரசியலமைப்பு உருவாக்கல் படிமுறை தொடர்பாகவும், புதிய அரசியலமைப்பில் முன்மொழியப்பட்ட விடயங்கள் தொடர்பாகவும் இதன் போது ஆராயப்படவுள்ளது.

குறித்த கருத்தரங்கில் ஆர்வமுள்ள அனைவரும் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள முடியும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.