கிளிநொச்சி நீதி மன்றில் கண்ணீர் விட்ட கைதி: மதுபோதையில் இருந்த 6 சிறைக்காவலர்களே சரமாரியாக தாக்கினர்

 

பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை படுகொலை செய்ய முயற்சித்தாக தெரிவித்து கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களில் முதலாம் சந்தேக நபரை சகோதர இனத்துவ கைதி ஒருவர் அநாகரீகமான முறையில் நடத்தியதனை அவதானித்த ஐந்தாம் சந்தேக நபர் சிறைக் காவலாளியிடம் முறையிட்டுள்ளார் இவ் வேளை பிரச்னையை சமரசம் செய்துவிட்டு சென்றுள்ளார்

பின்னர் இரவு வேளை மதுபோதையில் வந்த ஆறு சிறைக்காவலர்கள் இறுதி யுத்தத்தில் தனது உடலிலும் காலிலும் காயங்களால் பாதிக்கப்பட்டு இருந்த ஐந்தாவது சந்தேக நபரின் காலில் இருந்த காயத்தில் சப்பாத்து காலால் மிதித்துக் கொண்டு சரமாரியாக தாக்கியுள்ளனர் என சந்தேக நபர்கள் தரப்பு சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.

இதன் போது குறித்த ஐந்தாம் சந்தேக நபர் நீதிமன்றில் கண்ணீர் விட்டு அழுத்தத்தினை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

இது தொடர்பில் தெரியவருவதாவது

கிளிநொச்சி நீதிவான் நீதிமன்ற வழக்குடன் தொடர்புபட்ட அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் கடந்த 23ம்திகதி கடுமையாகத் தாக்கப்பட்டமை தொடர்பில் உரிய விசாரணை மேற்கொண்டு மன்றுக்கு அறிக்கையிடுமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டில் கைது செய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐந்து ச்நதேகநபர்களும் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்ற உத்தரவிற்கமைவாக நேற்றுவரை வரை (28-06-2017) அனுராதபுரம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் கடந்த 23ம் திகதி இரவு இச்சம்பவத்துடன் தொடர்புபட்ட ஐந்தாவது சந்தேக நபர் ஆறு சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் கடுமையாகத்தாக்கப்பட்ட நிலையில் அனுராதபுரம் வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர் தாக்கப்பட்டமை தொடர்பில் நேற்றைய தினம் (28-06-2017) மன்றின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதன் அடிப்படையில் மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நேற்று (28-06-2017) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த குறித்த ஐந்து சந்தேக நபர்களும் நேற்று (28-062017) கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் ஆயர்படுத்தப்பட்டிருந்தனர். இவர்கள் சார்பாக ஆஜரான சடடத்தரணிகள் மன்றில் தோன்றி கிளிநொச்சி நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக விளக்கமறியலில் வைக்கப்படுகின்ற கைதிகள் சிறைச்சாலையில் தொடர்ந்தும் தாக்கப்படுவது தொடர்பில் அறிக்கையொன்றினை சமர்ப்பித்தனர்.

இவ்வறிக்கையில் குறித்த வழக்கில் கைது செய்யப்பட்டு அனுராதபுரம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐந்து சந்தேக நபர்களில் முதலாவது சந்தேகநபர் சகோதர இனத்தைச் சேர்ந்த கைதியொருவரால் கேவலமாக நடத்தமுற்பட்டபோது ஐந்தாவது சந்தேகநபர் அதனைத்தட்டிக்கேட்க முயன்றதுடன் இது தொடர்பில் சிறைச்சாலைஉத்தியோகத்தரின் கவனத்திற்கும் கொண்டு வந்திருந்தார்.

இதனையடுத்து கடந்த 23ம்திகதி இரவு கடமையில் இருந்து ஆறு சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் ஐந்தாவது சந்தேகநபரை பாரதூரமாக தாக்கத்தியுள்ளனர்.யுத்தத்தின் போது கடுமையாகப்பாதிக்கப்பட்டு காலில் காயமடைந்த நிலையில் உள்ளஒருவர். இவரை குறித்த ஆறு சிறைச்சாலைஉத்தியோகத்தர்களும் சப்பாத்துக்கால்களால் ஏறி மிதித்து பாரதூரமாக துன்புறுத்தியுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றத்லிருந்து கொண்டு செல்லப்படுகின்ற கைதிகள் மிகப்பாரதூரமான முறையில் நான்கு ஐந்து தடவைகள் தாக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் பாதிக்கப்பட்டவர்களாலும் தங்களாலும் மன்றின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது என தெரிவித்த சட்டத்தரணிகள் குறித்த செயற்பாடு நீதிமன்றத்தினை அவமதிக்கும் செயலாக அமைவதுடன் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் மனிதாபிமானமற்ற முறையில் செயற்படுவதாகவும் சுட்டிக்காட்டியதுடன் இந்நிலையில் அனுராதபுரம் மற்றும் வவுனியா சிறைச்சாலைகளில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளகைதிகளின் உயிருக்கு உத்தரவாதமில்லாத நிலை காணப்படுகின்றது என்றும் ஏற்கனவே ஒரு மாதகாலப்பகுதிக்குள் வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு தடுத்து வைக்கப்படும் கைதிகள் சிறைச்சாலை அதிகாரிகளாலும் ஏனைய கைதிகளாலும் இவ்வாறு தாக்கப்பட்டு வருகின்றனர் எனக்குறிப்பிட்ட சட்டத்தரணிகள் மேற்படி வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐந்தாவது சந்தேக நபர் கடந்த 23ம்திகதி முதல் 26ம்திகதி வரையும் அனுராதபுரம் சிறைக்கூட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றதுடன் நேற்றைய தினம் (28-06-2017) மன்றில் ஒரு சுகதேகியாக ஆஜர்படுத்தப்படவில்லை.

இது தொடர்பில் குறித்த ஆறு சிறைச்சாலை அதிகாரிகள் மீதும் கடுமையான விசாரணைகள் மேற்கொள்ள வேண்டுமென்றும் சாட்சிகளுக்கு இடையூறு செய்யாதிருக்கவும் மேலும் இவர்களை அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைப்பதற்கு பாதுகாப்பில்லை என்றும் குறித்த ஐந்து சந்தேகநபர்களையும் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்க கட்டளையிடுமாறும் மன்றின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்திருந்தனர்.

இதனையடுத்து சட்டத்தரணிகளின் விண்ணப்பத்தினை ஏறறுக்கொண்ட நீதிமன்ற நீதிவான் இதற்கு முன்னரும் கைதிகள் தாக்கப்படுவது பாரபட்சமான முறையில் நடத்தப்படுவது தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளது.

இதுதொடர்பில் வாய்மொழி மூலமாகவும் கடிதம் மூலமும் உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் சுயதீன விசாரணை ஒன்றினை நடாத்தி மன்றுக்கு அறிக்கையிடுமாறும் கடந்த 23ம்திகதி அனுராதபுரம் சிறைச்சாலையில் கடமையில் இருந்த சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் பெயர் விபரங்களை மன்றுக்கு சமர்ப்பிக்குமாறும் பதிவாளர் மூலம் எழுத்து மூல அறிவிப்பை விடுக்குமாறும் குறித்த கைதிகளை யாழப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைப்பதற்கும் இதில் பாதிக்கப்பட்ட முதலாம் மற்றும் ஐந்தாவது சந்தேகநபர்களை விசேட சட்டவைத்திய அதிகாரியின் முன்னிலைப்படுத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.