இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியாவின் பிரபல நடிகை

இந்தியாவின் பிரபல நடிகையான சோனம் கபூர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

விடுமுறையை கழிக்கும் நோக்கில் தற்போது அவர் இலங்கையில் தங்கியுள்ளார்.

தனது சிறந்த நண்பியான நடிகை ஜெக்குலின் பெர்னாண்டஸின் நாடான இலங்கைக்கு சென்றுள்ளார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதற்கமைய இலங்கையில் அவர் தனது விடுமுறையை நன்கு கழித்து வருவதாக குறிப்பிடப்படுகின்றது.

சோனம் கபூர் தனது இலங்கையின் பயணத்தின் SONAMபோது எடுத்த சில புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டுள்ளார்.