ரம்ழான் பண்டிகை, எமது மக்களிடையே சமாதானம், ஒற்றுமை மற்றும் சகோதரத்து வத்தினை மேலும் வலுவாக்குவதாக அமைய பிராத்திக்கிறேன். என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் விடுத்துள்ள ரம்ழான் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
புனித ரமழான் மாதத்தின் நிறைவினை நினைவுகூரும் முகமாக இந்த நாளை நாம் கொண்டாடுகின்றபோது இப்பண்டிகையின் பாரம்பரியத்தை போற்றும் வகையில் சகோதரத்துவ உணர்வோடு நாம் பகிர்ந்துகொள்ளும் அதேவேளை இல்லாதவர்கள் மேல்காட்டும் கரிசனையையும் எமது சிந்தையில் கொள்வோமாக.
இந்தப் பெருநாளை கொண்டாடும் இத்தருணத்தில் எமது தேசத்தின் நல்லுறவிற்கான அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்துவதுடன், நாட்டின் ஒற்றுமையை உலகிற்கு எடுத்துக்காட்டவும் செயற்படுவோமாக.
இந்த ரமழான் பண்டிகையானது, எமது மக்களிடையே சமாதானம், ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தினை மேலும் வலுவாக்குவதாக அமைய வேண்டும் என பிராத்திக்கின்றேன் என தனது வாழத்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.