800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொண்டு அசத்திய 5 மாத கர்ப்பிணி வீராங்கனை

அமெரிக்காவில் கடந்த வியாழக்கிழமை யு.எஸ்.ஏ. டிரக் மற்றும் பீல்டு சாம்பியன்ஷிப்ஸ் தடகள போட்டி நடைபெற்றது. இதில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்வதற்காக அலிசியா மொன்டானோ வந்திருந்தார்.

இவரை பார்த்ததும் அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர். ஏனென்றால் அலிசியா 5 மாத கர்ப்பிணியாக இருந்தார். கடும் வெயிலை பொருட்படுத்தாமல் அலிசியா மிகச்சிறப்பாக ஓடினார். அனைவரும் பதபதைத்த நிலையில், வயிற்றில் 5 மாத குழந்தை இருக்கிறது என்ற கவலையில்லாமல், அலிசியா 800 மீட்டர் பந்தயத்தை சிட்டாக கடந்தார்.

31 வயதாகும் இவரால் முதல் இடத்திற்கு வரமுடியவில்லை என்றாலும், 2 நிமிடம் 21.40 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்தார். முதல் இடத்தை பிடித்த வீராங்கனையை விட 19 வினாடிகள் மட்டுமே காலதாமதமாகும்.

இவர் கர்ப்பிணியாக ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்வது இது முதன்முறையல்ல. ஏற்கனவே, 2014-ல் தனது முதல் குழந்தை வயிற்றில் இருக்கும்போதும் இதே தொடரில் கலந்து கொண்டுள்ளார். அப்போது 8 மாத கர்ப்பிணியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


2014-ல் 8 மாத கர்ப்பிணியாக இருந்த போது

இவர் தனிப்பட்ட முறையில் 800 மீட்டர் ஓட்டத்தை 1 நிமிடம் 57.34 வினாடிகளில் கடந்துள்ளார் என்பதை குறிப்பிடத்தக்கது.