சுவாமி அத்மஸ்தானந்தா காலமானார்: பிரதமர் மோடி இரங்கல்

ராமகிருஷ்ணா மடத்தின் தலைவர் சுவாமி அத்மஸ்தானந்தா நேற்று காலமானார். அவருக்கு வயது 98. கொல்கத்தாவில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் ஆஸ்பத்திரியில் அவரது உயிர் பிரிந்தது. அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி ‘டுவிட்டர்’ பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதில், கொல்கத்தாவுக்கு எப்போது சென்றாலும், சுவாமி அத்மஸ்தானந்தாவை சந்தித்து ஆசி பெற்று வந்ததாகவும், அவரது மறைவு, தனக்கு தனிப்பட்ட முறையில் இழப்பு என்றும் மோடி கூறியுள்ளார்.