மகிந்தவின் சாரதியை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு!!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சாரதி திஸ்ஸ விமலசேனவை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

முன்னதாக, அரசாங்க காணியில் சட்டவிரோதமாக கல் அகழ்வு செய்தமை தொடர்பில் நிதி மோசடி விசாரணை பிரிவினரால் இன்று திஸ்ஸ விமலசேன கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.