வறட்சியான காலநிலை காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சுமார் ஆறு இலட்சத்து 50 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வட மாகாணத்தில் 1 லட்சத்து 30 ஆயிரத்து 931 குடும்பங்களைச் சேர்ந்த 4 லட்சத்து 52 ஆயிரத்து 907 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், கிழக்கு மாகாணத்தில் 55 ஆயிரத்து 249 குடும்பங்களைச் சேர்ந்த இரண்டு லட்சத்து 451 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலை மேலும் 5 மாதங்களுக்கு நீடிக்கும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக 2 இலட்சத்து 43 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 8 இலட்சத்து 50 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு, குருநாகல், புத்தளம் மற்றும் அநுராதபுரம் முதலான 11 மாவட்டங்களே வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன.







