நாட்டு மக்களுக்கு முக்கிய அறிவித்தல்!

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு மின்சக்தி அமைச்சு, பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

கடந்த வாரம் கடுமையான மழை பெய்த போதிலும் நீர்தேக்கங்களில் போதியளவு நீர் கிடைக்கவில்லை என அமைச்சர் ரஞ்சித் சியம்பலப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

இந்த காரணமாக மின்சாரம் தயாரிப்பதற்கு தேவையான நீர் கிடைக்கவில்லை.

நீர் போதுமான அளவு இல்லாமையினால் மாற்று மின்சக்தியை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்க நேரிட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பொத்துவில் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.