இந்திய  இராணுவத்தில்  பெண்களை இணைக்க தீர்மானம்

புதுடில்லி: இராணுவ காவல் படை பிரிவில் விரைவில் பெண்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள் என்று இராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் கூறியுள்ளார்.
இந்திய ராணுவத்தில் பொறியியல்   டாக்டர்கள் கல்வி உள்ளிட்ட பிரிவுகளில் மட்டுமே பெண்கள் பணியாற்றி வருகின்றனர். ஜெர்மனி ஆஸ்திரேலியா கனடா உள்ளிட்ட நாடுகளில் ராணுவத்தில் பெண்கள் பணியாளர்கள் உள்ளனர் என இராணுவ தளபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் பிபின் இராவத் பேசியதாவது முதலில் பெண்கள் இராணுவ காவல் படை பிரிவில் பணியமர்த்தப்படுவார்கள். ஜெர்மனி ஆஸ்திரேலியா கனடா நாடுகளில் போர் நடவடிக்கைகளில் பெண்கள் ஈடுபடுவது போல இந்திய இராணுவத்திலும் பெண்கள் போர் நடவடிக்கையிலும் ஈடுபடுத்தப்படவுள்ளார்கள் என்றார்.