கட்டாரில் நெருக்கடியான சூழ்நிலை! மைத்திரி தலையீடு

கட்டாரில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால தெரிவித்துள்ளார்.

கட்டாரில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு மத்தியில், அங்குள்ள இலங்கையர்களின் நிலை தொடர்பில் விசேட அறிக்கை ஒன்றை தயாரிக்குமாறு ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் 13ம் திகதி குறித்த அறிக்கையை அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரல ஆகியோருக்கு ஜனாதிபதி பணிப்புரை வழங்கியுள்ளார்.

கட்டாரில் ஒரு இலட்சத்து 40 இலங்கையர்கள் பணியாற்றி வருகின்ற நிலையில், அவர்கள் தொடர்பில் அரசாங்கம் அதீத கரிசனை கொண்டுள்ளது.

பயங்கரவாத அமைப்புகளுக்கு கட்டார் அரசாங்கம் உதவி செய்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில், மத்திய கிழக்கை சேர்ந்த ஐந்து நாடுகள் கட்டாருடனான ராஜதந்திர உறவுகளை துண்டித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.