அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கத்தோலிக்க சமூகம் உதவி வழங்க வேண்டும்: ஆயர் பேரவை

இலங்கையில் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கத்தோலிக்க சமூகம் தொடர்ந்து உதவிகளை வழங்க வேண்டும் என இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.

அறிக்கை ஒன்றின் ஊடாக கத்தோலிக்க ஆயர் பேரவை இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளதாக வத்திக்கான் ரேடியோ இணையத்தளம் தகவல் வெளியிட்டுள்ளது.

அரசாங்க முகவர்கள் மற்றும் சிவில் அமைப்புகள் ஊடாக கத்தோலிக்க சமூகம், மனிதாபிமான உதவிகளை வழங்குவதை விரிவுபடுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப நிதி மற்றும் நிவாரணப் பொருட்கள் என்பவற்றை உதவியாக வழங்க வேண்டும் எனவும் ஆயர் பேரவை குறிப்பிட்டுள்ளது.