ஆசிய பசுபிக் பிராந்திய குழுவின் உதவி தவிசாளர் நிலை இலங்கைக்கு!

ஐக்கிய நாடுகளின் பொதுசபை அமர்வின்போது ஆசிய பசுபிக் பிராந்திய குழுவின் 72 வது அமர்வின் உதவி தவிசாளர் நிலைக்கு இலங்கை தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி 2017 செப்டம்பர் முதல் 2018 ஆகஸ்ட் வரையிலான பகுதிக்கு இலங்கையின் பிரதிநிதி இந்த பொறுப்பை வகிப்பார்.

இலங்கையின் ஐக்கிய நாடுகளுக்கான நிரந்தர பிரதிநிதி ரொஹான் பெரேராவே இந்த நிலைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இவரின் தெரிவை, சுலோவேக்கியாவின் வெளியுறவு அமைச்சர் பிரேரித்தார்.