மாதவிடாய் கோளாறுகள்: உடல் எடை அதிகரிக்குமா?

பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகள் இருந்தாலே, உடல் எடையை அதிகரிப்பு போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும். அதற்கான தீர்வை குறித்து காண்போம்..

மாதவிடாய் கோளாறுகள் ஏற்பட என்ன காரணம்?
  • உணவு முறை
  • தைராய்டு பிரச்சனை
  • பைபராய்டு (கர்ப்பப்பையில் பெரிய கட்டிகள்)
  • கர்ப்பப்பை நீர் கட்டிகள்
  • ரத்தமின்மை
மாதவிடாய் கோளாறை தடுப்பது எப்படி?
  • தைராய்டு டெஸ்ட்டை 3 மாதத்துக்கு ஒரு முறை எடுக்க வேண்டும். அடிக்கடி நடைப்பயிற்சி மற்றும் யோகா போன்ற பயிற்சிகளை தவறாமல் செய்து வருவதுடன், சரிவிகித உணவை உட்கொள்ள வேண்டும்.
  • தினமும் ஒரு டம்ளர் ஆப்பிள் ஜூஸை உணவு சாப்பிடுவதற்கும் அரை மணிநேரம் முன் சாப்பிட வேண்டும். இதனால் ரத்த சோகை ஏற்படுவது தடுக்கப்படும்.
  • குளுக்கோஸ், ப்ரக்டோஸ் என்ற இயற்கையான சர்க்கரைப் பொருட்கள் அடங்கிய பேரீச்சம் பழத்துடன் தேன், குங்குமப்பூ கலந்து சாப்பிடுவதுடன், 1 டம்ளர் பால் குடித்து வந்தால், உடம்பில் ரத்தத்தின் அளவை அதிகரிக்கும்.
  • இரவு உணவுக்குப் பின் பழுத்த செவ்வாழைப்பழம் ஒன்றை சாப்பிட்டு ஒரு டம்ளர் பாலில் குங்குமப்பூ போட்டு குடித்து வந்தால், ஆண்களுக்கு விந்து உற்பத்தியும், பெண்களுக்கு கர்ப்பப்பையின் பலமும் அதிகரிக்கும்.