இலங்கைக்கு அமெரிக்கா நிதியுதவி

இலங்கையின் அனர்த்த நிவாரணப்பணிகளுக்கு நிதியுதவி வழங்கப்போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது

இன்று இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த இலங்கைக்கான அமெரிக்கா தூதுவர் அடுல் கெசாப் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்

இந்த அறிவிப்புக்கு அமைய அமெரிக்கா, இலங்கையின் அனர்த்த நிவாரணப்பணிகளுக்காக 350மில்லியன் ரூபாய்களை வழங்கவுள்ளது.

ஏற்கனவே இந்தியா, சீனா, பாகிஸ்தான், ஜப்பான் என்ற அடிப்படையில் பல நாடுகளும் இலங்கையின் நிவாரணப்பணிகளுக்கு உதவியளித்துள்ள நிலையிலேயே இன்று அமெரிக்காவின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.