ஆறு மணித்தியாலங்களுக்கு ஒரு தடவை இலங்கையின் அனர்த்த நிலைமைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன இந்த தகவலை ஊடகவியலாளர்களிடம் பகிர்ந்து கொண்டார்.
அனர்த்த முகாமைத்துவ நிலையத்தில் இன்று நடைபெற்ற சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ராஜித மேலும் கூறுகையில்,
அத்தியாவசியமான மருத்துவ சிகிச்சைகளுக்காகவே பிரதமர் வெளிநாட்டுக்கு விஜயம் செய்துள்ளார்.
18 மாதங்களுக்கு முன்னதாகவே மருத்துவ சிகிச்சை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் பிரதமருக்கு காணப்பட்டது .
எனினும் அந்த நேரத்தில் நோய் படுக்கையில் இருக்க விரும்பாத பிரதமர், மருத்துவ சிகிச்சைகளை ஒத்தி வைத்து, பணிகளை தொடர்ந்து வந்தார்.
மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்தாலும் பிரதமர் ஒவ்வொரு ஆறு மணித்தியாலங்களுக்கு ஒரு தடவையும் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு கோரும் பிரதமர் ஆலோசனைகளையும் வழங்கி வருகின்றார் என டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.