படுகொலைகளுடன் நேரடி தொடர்பில் கோத்தபாய! ஆதாரங்கள் சிக்கின

வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற படுகொலை சம்பவத்துடன், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு தொடர்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

வெலிக்கடை சிறைச்சாலையில் 2012ஆம் நவம்பர் மாதம் 19ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளுக்கு, கோத்தபாய நேரடியாக ஆலோசனை வழங்கியதனை உறுதி செய்யும் ஆதாரங்களை குற்ற விசாரணை திணைக்கள அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

குறித்த கொலைகள் தொடர்பில் கோத்தபாய ராஜபக்ச, முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக்க, ஊடாக பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகர் நியோமால் ரங்கஜீவ வழங்கிய “துண்டு” ஒன்று கிடைத்துள்ளதாக குற்ற விசாரணை திணைக்கள அதிகாரி தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த சம்பவத்தின் போது கோத்தபாய தொலைப்பேசி அழைப்பு மேற்கொண்ட நபர்களின் தகவல்கள் மற்றும் குறித்த அழைப்புகள் தொடர்பில் குற்ற விசாரணை திணைக்கள அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

குறித்த சாட்சிகளுக்கமைய வெலிக்கடை கொலைகளுக்கு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் நேரடியாக ஆலோசனை வழங்கியுள்ளமை உறுதியாகியுள்ளதாகவும், எதிர்வரும் நாட்களில் அந்த ஆதரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.