நடிகர் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து விஜயகாந்த் என்ன சொன்னார் தெரியுமா?

நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தேமுதிக தலைவர் விஜயகாந்த், ஜனநாயக நாட்டில் அரசியலில் யார் வேண்டுமானாலும் வரலாம்.

யார் தலைவர் என்பதை மக்கள் முடிவு செய்வார்கள், அரசியலில் எதிர்ப்பை சந்தித்து தான் வளர வேண்டும்.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை நாறிப்போய் உள்ளது, இரு அணிகளும் நான்கு ஆண்டுகளைக் கடத்துவது பற்றியே சிந்தனை செய்கின்றன.

அவர்களுக்கு மக்களைப் பற்றிய அக்கறை இல்லை, விரைவில் ஆட்சி கலையும்.

தேர்தல் நடைபெறும், ஒரு ஓட்டுக்கு மூன்று முதலமைச்சர் என்ற நிலை தமிழ்நாட்டில்தான் உள்ளது.

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்புக்கு பின்னரே கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.