மூன்றாம் உலகப் போர் நெருக்கடியில் இலங்கை சிக்கும் அபாயத்தில் இருப்பதாக முன்னாள் அமைச்சர் திஸ்ஸவிதாரண தெரிவித்துள்ளார்.
பொரளை என்.எம் பெரேரா நிலையத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
இலங்கை, இந்தியாவிற்கு இடையிலான தொடர்பானது அரசியல் மற்றும் பொருளாதாரத்துடன் மட்டுப்படுத்தப்பட்டது அல்ல. மாறாக இராணுவத் தொடர்பும் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த இராணுவத் தொடர்பானது அமெரிக்கா வரையிலும் நீண்டு செல்லக் கூடியது. இந்நிலையில் குறித்த விடயத்தில் அமெரிக்காவும் தொடர்புபட்டுள்ளது.
இதேவேளை, அமெரிக்காவின் தொடர்பு காரணமாக இலங்கை மூன்றாம் உலகப் போரில் சிக்கிக்கொள்ளும் அபாயம் காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.







