சளியை குணமாக்கும் கற்பூரவல்லி டீ

தேவையான பொருட்கள் :

தேயிலை – ஒரு டீஸ்பூன்,
கற்பூரவல்லி இலைப்பொடி – கால் டீஸ்பூன்,
தேன் – 1 டீஸ்பூன்.

செய்முறை :

* ஒரு பாத்திரத்தில் 1 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

* தண்ணீர் நன்றாக கொதிக்கும் போது தேயிலையுடன் கற்பூரவல்லி இலைப்பொடியைச் சேர்த்துக் கொதிக்கவிட வேண்டும்.

* பிறகு, அதை வடிகட்டி அதனுடன் தேன் சேர்த்துப் பருகவும்.

* கற்பூரவல்லி டீ ரெடி.