வடக்கு கிழக்கு மாகாணங்களில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
போரில் உயிர் நீத்த தமிழீழ விடுதலைப் புலிப் போராளிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நினைவேந்தல் நிகழ்வுகள் வடக்கு கிழக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், இதனால் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இன்று முதல் வடக்கு கிழக்கு மாகாணங்களில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
உயிரிழந்த புலிகளை நினைவு கூரும் அரச விரோத செயற்பாடுகள், பேரணிகள், கூட்டங்கள் போன்றனவற்றை சில தரப்புக்கள் திட்டமிட்ட வகையில் நடத்த உள்ளதாக புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
வடக்கில் செயற்பட்டு வரும் சில அரசியல் தரப்புக்கள் அப்பாவி பொதுமக்களை பிழையாக வழிநடத்தி இவ்வாறு நிகழ்வுகளை நடத்துவதாக சிரேஸ்ட பொலிஸ் அதிகாரியொருவர் கொழும்பு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான அரச விரோத நிகழ்வுகளை நடத்த எவருக்கும் அனுமதியளிக்கப்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.