இந்திய பிரதமர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த வேளை, அவருக்கு பாதுகாப்பு வழங்க இரண்டு ஹெலிகொப்டர்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
இந்நிலையில் இலங்கை வந்த எம்.ஐ 17 ரக ஹெலிகாப்டர்களை தரையிறக்கும் போதும், பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுபடும் போதும் பல சேதங்களை ஏற்படுத்தியிருந்தன.
இதனால் ஹட்டன் டன்பார் மைதானத்திற்கு அருகில் அமைந்துள்ள சமனலகம பிரதேசத்தில் 10 வீடுகள் சேதமடைந்திருந்தன.
அதற்காக 10 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ஹட்டன் பொலிஸ் தலைமைய பொலிஸ் அதிகாரி புஷ்பகுமார ஹெட்டியாரட்சி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கினிகத்தேன பிரதேச செயலாளர் அலுவலகம் ஊடாக ஏற்பட்ட நட்டம் தொடர்பில் மதிப்பீட்டு அறிக்கை ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகம் கவனம் செலுத்தியுள்ளது. ஹெலிகொப்டர்களால் ஏற்பட்ட பாதிபுகளுக்கு நட்டஈடு வழங்க இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
மோடிக்கு பாதுகாப்பு வழங்கிய ஹெலிகொப்டர் ஏற்படுத்திய தாக்கத்தினால், பெண் ஒருவர் காயமடைந்து டிக்கோயா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.








