ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடந்தது. இதன் பிரீஸ்டைல் ஆண்கள் 125 கிலோ உடல் எடைப்பிரிவில் இந்திய வீரர் சுமித், ஈரான் வீரர் யடோல்லா முகமத் கசிமை சந்தித்தார்.
இதில் இந்திய வீரர் சுமித் 2-6 என்ற புள்ளி கணக்கில் தோல்வி கண்டு வெள்ளிப்பதக்கம் வென்றார். இந்த போட்டியில் இந்தியா ஒரு தங்கம், 5 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 10 பதக்கம் வென்றது.