அமைச்சரவை மீளமைப்பு இடம்பெறும் வரை அமைச்சரவை கூட்டங்கள் நடத்தப்படாது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி இதற்கான தீர்மானத்தை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீனாவுக்கு சென்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பி அமைச்சரவை மீளமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று அரசாங்க தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமைச்சரவையின் மீளமைப்புக்கு ஜனாதிபதியும் பிரதரும் உடன்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் இந்த மாற்றங்கள் நாட்டின் பொருளாதார நலன்கருத்திய மாற்றங்களாக இருக்கும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.







