யாழ். ஊர்காவற்துறை பகுதியில் வைத்து கர்ப்பிணி பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று (12) ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில், நீதவான் ஆர்.சபேசன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது, சந்தேகநபர்கள் இருவரையும் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
ஜனவரி மாதம் 24ஆம் திகதி யாழ். ஊர்காவற்துறை சுருவில் பகுதியில் வீட்டில் தனிமையில் இருந்த 7 மாத கர்ப்பிணி பெண் ஹம்சிகா கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
தலையின் பின்பகுதியில் பலமாக தாக்கப்பட்டதன் காரணமாக மூளை சிதைவடைந்து அவர் உயிரிழந்துள்ளதாக பெண்ணின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.







