பிளஸ் 2 பொதுத்தேர்வு: முதல்முறையாக சாதனை படைத்த திருநங்கை

சென்னையில் அம்பத்தூர் அரசுப் பள்ளியில் பயின்று வந்த திருநங்கை தாரிகா பானு நாட்டிலேயே முதல் முறையாக பிளஸ் 2 பொதுத்தேர்வெழுதி தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார்.

நீண்ட போராட்டங்களுக்கு பின்னர் மாவட்ட ஆட்சியர், கல்வி அலுவலரின் உதவியுடன் சென்னை அம்பத்தூர் காமராஜர் அரசுப் பள்ளியில் திருநங்கை தாரிகா பானு பயின்றார்.

கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுதியதுடன் தற்போது தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார்.

அவர் கூறுகையில், நாட்டிலேயே முதன்முறையாக பொதுத்தேர்வில் பங்குபெற்று தேர்ச்சி பெற்ற மாணவி என்பதால் மிகவும் நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன்.

திருநங்ககைகள் பாலியல் தொழிலுக்கும், பிச்சை எடுக்கும் தொழிலை மட்டுமே செய்வார்கள் என்பதை மாற்றவே கடுமையான போராட்டத்திற்கு பிறகு பள்ளியில் சேர்ந்து தேர்ச்சி பெற்றேன்.

மருத்துவ துறையில் சேர்ந்து படிக்கவே நான் விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர், மூன்றாம் பாலின மாணவர்களை சேர்த்துக் கொள்ள தாங்கள் எப்போதும் தயாராக இருப்பதாகவும், சம மாணவிகள் திருநங்கை தாரிகாவை பாகுபாடின்றி நடத்தியதோடு, ஆசிரியர்களும் வேறுபாடுகளின்றி பாடம் பயிற்றுவித்த காரணத்தினால் திருநங்கை மாணவி தாரிகாபானு வெற்றி அடைந்துள்ளார் என்று பாராட்டு தெரிவித்துள்ளார்.