மகிந்தவின் மேதின கூட்டத்தில் 40வீத பகுதியிலேயே மக்கள் கூட்டம் நிறைந்திருந்ததாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
மஹிந்த அணியின் மேதின நிகழ்வு காலிமுகத்திடலில் இடம்பெற்றபோது கூட்டத்தில் 40வீத பகுதியிலேயே மக்கள் கூட்டம் நிறைந்திருந்தனர். கண்டி கெட்டம்பேயில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மேதினக்கூட்டத்துக்கு மஹிந்தவின் மேதினத்தை காட்டிலும் அதிகமானோர் வந்திருந்தாக குறிப்பிட்டார்.
எனினும் மஹிந்த தரப்பினர் பொய்யான பலத்தை காட்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
குறைந்தளவு மக்கள் கூட்டம் என்பதற்காகவே மஹிந்த தரப்பினர் மேதின ஊர்வலத்தை நடத்தவில்லை என்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க சுட்டிக்காட்டியுள்ளார்.







