வில்லனாக அவதாரம் எடுக்கும் வடிவேலு: யாருக்கு தெரியுமா?

தமிழ் சினிமாவில் காமெடியில் தனக்கென ஒரு உயர்ந்த இடத்தை பிடித்திருப்பவர் `வைகைப் புயல்’ வடிவேலு. நகைச்சுவை, நடிப்பு மற்றும் தனது ஒவ்வொரு அசைவின் மூலமும் அனைத்து தரப்பினரையும் சிரித்து ரசிக்க வைத்திருக்கிறார்.

சில மாதங்களாக படங்களில் நடிக்காமல் இருந்த வடிவேலு, நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஷாலின் ‘கத்திச்சண்டை’ படத்தில் நடித்திருந்தார். இப்படம் நல்ல வரவேற்பை பெறாத நிலையில், அடுத்ததாக ‘சிவலிங்கா’ வெளியானது. இப்படம் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றாலும், வடிவேலு காமெடி பேசும்படி இருந்தது.

இதைத்தொடர்ந்து அட்லி இயக்கத்தில் விஜய்யின் 61-வது படத்தில் வடிவேலு நடித்து வருகிறார். இதையடுத்து, ஆர்.கே.யுடன் இணைந்து `நீயும் நானும் நடுவுல பேயும்’ படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்த படத்தில் ஆர்.கே.யுடன் மற்றொரு நாயகன் போன்ற வேடத்தில் வடிவேலு வருகிறாராம். இதில் காமெடி கலந்த வில்லன் வேடம். இருவருக்கும் எதிரும் புதிருமான பாத்திரம். இந்த படத்தில் வடிவேலு புதிய கெட்-அப்பில் நடிக்க இருக்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது. காமெடியிலேயே கலக்குவார். வில்லத்தனம் நிறைந்த காமெடியிலும் சொல்லவா வேணும். தெறிக்க விடுவார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.