ஜெயலலிதாவின் விலை உயர்ந்த 5 கைகடிகாரங்கள் கொள்ளை!!

ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் பங்களாவில் 5 கை கடிகாரங்களும், விலை உயர்ந்த பளிங்கு கற்களால் ஆன பழமைவாய்ந்த பொருட்களும் கொள்ளையடிக்கபட்டுள்ளன.

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் சில தினங்களாக நடக்கும் மர்மங்கள் பற்றிய உண்மையை பொலிசார் தற்போது கூறியுள்ளனர்.

அவர்கள் கூறுகையில், சில தினங்களுக்கு முன்னர் 3 கார்களில் 11 பேர் கொண்ட கும்பல் இங்கு கொள்ளையடிக்க வந்துள்ளது.

அங்கிருந்த ஓம்பகதூர் என்னும் காவலாளியை கொன்ற அவர்கள், இன்னொரு காவலாளி கிருஷ்ண பகதூரை கத்தியால் குத்தி விட்டு, அவர் முகத்தில் மயக்க மருந்து தெளித்துள்ளனர்.

பின்னர், பங்களா உள்ளே சென்ற கும்பல் அங்கு பணம், நகை இருக்கிறதா என தேடியுள்ளது. அங்கு ஏதும் இல்லாததால், ஷோ-கேசில் இருந்த 5 கைகடிகாரங்கள் மற்றும் விலை உயர்ந்த பளிங்கு கற்களால் ஆன பழமைவாய்ந்த பொருட்களை கொள்ளையடித்துவிட்டு அங்கிருந்து அவர்கள் தப்பியுள்ளனர்.

இது சம்மந்தமாக நடந்த விசாரணையில், ஜெயலலிதாவின் கார் டிரைவரான கனகராஜ், அவருடைய நண்பர் சயன், சந்தோஷ் (39), திபு (32), சதீசன் (42), உதயகுமார் (47) உள்பட 11 பேருக்கு இதில் தொடர்பு இருப்பதை கண்டுபிடித்தோம்.

இதில் சந்தோஷ், திபு, சதீசன், உதயகுமார் ஆகியோரை கைது செய்துள்ளோம்.மேலும், ஐந்து பேரை தேடி வருகிறோம்.

கொள்ளையடிக்கபட்ட ஐந்து கை கடிகாரங்களும் கேரளாவில் உள்ள ஆற்றில் வீசப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.அதை மீட்பது குறித்து நடவடிக்கை எடுத்து வருகிறோம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.