இலங்கையில் கடந்த 4 மாதங்களில் சுமார் 40,000 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் டெங்கு நோய் கட்டுப்பாட்டுப் பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.
ஏப்ரல் மாதத்தின் முதல் 21 நாட்களில் 7 ஆயிரத்து 23 டெங்கு நோயாளர்கள் இணங்காணப்பட்டுள்ளதாக டெங்கு நோய் கட்டுப்பாட்டுப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
2017ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 39 ஆயிரத்து 313 டெங்கு நோயாளர்கள் நாடாளாவிய ரீதியில் இணங்காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை, 2016ஆம் ஆண்டின் முதல் நான்கு மாத காலப்பகுதிக்குள் 16 ஆயிரத்து 661 டெங்கு நோயாளர்களே நாடாளாவிய ரீதியில் அடையாளங்காணப்பட்டதாக சுகாதார அமைச்சின் டெங்கு நோய் கட்டுப்பாட்டுப் பிரிவின் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







