யாழ். மக்களை அவதிக்குள்ளாக்கிய மின்சார சபை

யாழ். குடாநாட்டின் பல்வேறிடங்களிலும் இன்று இரவு முன்னறிவிப்பின்றி திடீர் மின்தடை ஏற்பட்டமையால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

இன்று வெள்ளிக்கிழமை(28) இரவு யாழ்.குடாநாட்டின் வலி.தெற்கு, வலி. கிழக்குப் பிரதேசங்கள் உட்படக் குடாநாட்டின் பல்வேறிடங்களிலும் இலங்கை மின்சார சபையால் முன்னறிவித்தல் எதுவும் விடுக்கப்படாத நிலையில் திடீர் மின்தடை ஏற்பட்டது.

இரவு- 07.15 மணி முதல் 08.15 மணி வரை இந்தத் திடீர் மின்தடை அமுலிலிருந்தது. இரவு வேளையில் ஏற்படுத்தப்பட்ட இந்தத் திடீர் மின்தடை காரணமாகப் பொதுமக்களின் அன்றாடச் செயற்பாடுகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டது.

இரவு வேளையில் முன்னறிவித்தல் எதுவுமின்றி அமுல்படுத்தத்தப்பட்ட மின்தடை தொடர்பாகக் கடும் விசனம் தெரிவித்துள்ள பொதுமக்கள் எதிர்வரும் காலங்களில் முன்னறிவித்தலின்றி மின்தடை அமுல்படுத்தாதிருக்க இலங்கை மின்சார சபை உரிய முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.