முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவைக் கொண்டு தொழிற்சங்கங்களை முடக்க முடியுமா என கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொகுகே கேள்வி எழுப்பியுள்ளார்.
பத்தரமுல்ல நெலும் வீதியில் நேற்று நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
அமைச்சர் சரத் பொன்சேகாவைக் கொண்டு தொழிற் சங்கங்களை அடக்க முடியுமா என நாம் அரசாங்கத்திற்கு சவால் விடுக்கின்றோம்.
நாட்டில் அநீதியை ஆட்சி செய்விக்க முயற்சித்தால் அதனை முறியடிக்க கூட்டு எதிர்க்கட்சிகள் தயார். இந்த அரசாங்கம் வெறும் வாய்ச்சவடால் விடுவதனையே வழமையாகக் கொண்டுள்ளது.
இந்த அரசாங்கம் ஆட்சி பீடம் ஏறியது முதல் உழைக்கும் வர்க்கத்தினர் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
அநீதியால் பாதிக்கப்பட்ட அனைவரும் காலி முகத் திடலில் நடைபெறவுள்ள மே தினக் கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கின்றோம்.
எனக்கு எதிராக கட்சி எவ்வாறான நடவடிக்கை எடுத்தாலும் அதற்கு அஞ்சப் போவதில்லை, எந்தவொரு சவாலையும் எதிர்நோக்கும் பலம் எமக்கு உண்டு என காமினி லொகுகே தெரிவித்துள்ளார்.