பாலிவுட்டின் பிரபல நடிகரான வினோத் கண்ணா (70) மும்பையில் காலமானார். கடந்த சில வருடங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்த அவர், 2 நாட்களுக்கு முன்னர், மும்பையில் உள்ள மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி மும்பையில் காலமானார்.
இவருக்கு கவிதா கண்ணா என்ற மனைவியும், ராகுல், அக்ஷயே, சக்ஷி என்ற மகன்களும், ஷ்ரத்தா கண்ணா என்ற மகளும் இருக்கின்றனர். பஞ்சாப்புக்கான பாராளுமன்ற உறுப்பினரான வினோத் கண்ணா பாலிவுட்டில் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

வினோத் கண்ணாவுக்கு முன்னதாகவே கீதாஞ்சலியுடன் திருமணமாகி பின்னர் விவாகரத்து ஆனது குறிப்பிடத்தக்கது. அரசியலில் தீவிர கவனம் காட்டி வந்த வினோத் கண்ணா சமீபத்தில் `தபாங்’, `ப்ளேயர்ஸ்’, `தபாங் 2′, `தில்வாலே’ உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.







