வட கொரியா அதிபருக்கு மனநலம் பாதித்துவிட்டது: அமெரிக்கா சாடல்

வட கொரிய அதிபர் மனநலம் பாதிக்கப்பட்டவராக மாறியுள்ளார் என அமெரிக்க தூதரக அதிகாரி Nikki Haley கூறியுள்ளார்.

அணு ஆயுத சோதனை நடத்தி உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலை கொடுத்து வரும் வட கொரியா, தாங்கள் மேற்கொள்ளும் சோதனையை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்பது மட்டுமே எங்கள் நோக்கம்.

போரிடுவது என்பது அமெரிக்காவின் நோக்கம் கிடையாது. வட கொரியா கடந்த ஏப்ரல் 16 திகதி நடத்திய ஏவுகணை வெளியீட்டிற்கு ஐநா கண்டனம் தெரிவித்தது, மற்றும் வட கொரியா அச்சுறுத்தலை கட்டுப்படுத்த சீனாவுடன் அமெரிக்க செயல்பட தொடங்கியது ஆகிய இரண்டும் வட கொரியா அதிபர் கிம் ஜாங்கின் அழுத்தத்தை அதிகரித்துள்ளது.

மேலும், தான் மேற்கொள்ளும் அணு ஆயுத சோதனை மூலம் உலக நாடுகள் அச்சப்படும் என்று நம்புகிறார். அதிபராக இருக்கும் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவராக மாறியுள்ளார் என கூறியுள்ளார்.