தினகரனுக்கு முடிவு கட்டிய 70 நாட்கள்

பிப்ரவரி 15 ஆம் திகதி அதிமுக கட்சியின் துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதன் மூலம் தனது இரண்டாவது அரசியல் பயணத்தை தொடங்கினார் தினகரன்.

ஆனால், 70 நாட்களுக்குள் அதற்கு ஒரு முடிவு கட்டப்பட்டுள்ளது.

2017 – பிப்ரவரி 15: அ.தி.மு.க., துணைப்பொதுச்செயலராக சசிகலாவால் நியமனம்

பிப்ரவரி 16: எடப்பாடி தமிழக முதல்வராக தேர்வு, முதல் வரிசையில் அமர்ந்து ரசித்தார் தினகரன்

மார்ச் 15: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவிப்பு

மார்ச் 22: இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது.

மார்ச் 23: தொப்பியுடன் அ.தி.மு.க., அம்மா அணியாக ஆர்.கே.நகரில் களமிறங்கினார்.

ஏப்ரல் 7: அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ஐ.டி., ரெய்டு

ஏப்ரல் 10: பணப்பட்டுவாடா புகார் எதிரொலி; ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து

ஏப்ரல் 17: ரூ.1.30 கோடியுடன் சுகேஷ் டில்லியில் கைது; தினகரன் மீது வழக்கு பதிவு

ஏப்ரல் 18: தினகரனை அ.தி.மு.க.,விலிருந்து விலக்கி வைப்பதாக அமைச்சர்கள் அறிவிப்பு

ஏப்ரல் 19: கட்சி நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கிகொள்வதாக தினகரன் அறிவிப்பு

ஏப்ரல் 19: வீட்டிற்கு வந்து தினகரனுக்கு நேரில் ஆஜராக உத்தரவிட்டு சம்மன் அனுப்பிய டெல்லி பொலிஸ்.

ஏப்ரல் 22: டில்லி பொலிசாரிடம் நேரில் ஆஜர். 7 மணி நேரம் விசாரணை. சுகேஷ் யாரென தெரியாது என்றார்.

ஏப்ரல் 23: 2வது நாளாக ஆஜர். 9 மணி நேரம் விசாரணை.

ஏப்ரல் 24: 3வது நாளாக ஆஜர். 13 மணி நேரம் விசாரணை. ஒற்றை வரியில் பதில்.

ஏப்ரல் 25: 4வது நாளாக ஆஜர். 7 மணி நேரம் விசாரணை. ஆதாரங்களின் அடிப்படையில் நள்ளிரவில் தினகரன் கைது செய்யப்பட்டார்.