மீதொட்டமுல்ல அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக மூன்று மாதங்களுக்காக வழங்கப்படவிருந்த ஒரு இலட்சத்து 50 ஆயிரும் ரூபாய் நட்டஈட்டுத் தொகையை ஒரே தடவையில் வழங்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார்.
கொழும்பு மற்றும் கொழும்பை அண்மித்த பகுதிகளில் குப்பை அகற்றப்படுவது தொடர்பான சந்திப்பொன்று ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றபோதே அவர் இந்தப் பணிப்புரையை விடுத்துள்ளார்.
மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்த அனர்த்தத்தில் 98 வீடுகளை சேதமடைந்தன. அந்த வீடுகளில் வசித்த குடும்பங்களுக்கு மாதமொன்றுக்கு 50 ஆயிரம் ரூபா அடிப்படையில் மூன்று மாதங்களுக்கு ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா நாட்டஈட்டை வழங்குவதாக அரசாங்கம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில், அந்தத் தொகையை ஒரே தடவையில் வழங்குமாறு ஜனாதிபதி அறிவித்துள்ளார்.







