செரிமான பிரச்சனையை தீர்க்கும் தனியா துவையல்

தேவையான பொருட்கள் :

தனியா – கால் கப்,
காய்ந்த மிளகாய் – 8,
பூண்டு – 5 பல்,
கறிவேப்பிலை – ஒரு ஆர்க்கு,
புளி – பெரிய நெல்லிக்காய் அளவு,
கடுகு, உளுந்தம்பருப்பு – தலா கால் டீஸ்பூன்,
தேங்காய் துருவல் – 4 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய் – 2 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை :

* வாணலியை சூடாக்கி தனியாவை போட்டு வாசனை வரும் வரை வறுத்து எடுத்து ஆற வைக்கவும்.

* அடுத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய்ந்த மிளகாய், பூண்டு, புளி, கறிவேப்பிலை, தேங்காய் துருவலை தனித்தனியாக போட்டு வறுத்து ஆறவைக்கவும்.

* ஆறியபின் எல்லாப் பொருட்களையும் ஒன்றாக்கி, உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு மிக்சியில் அரைக்கவும்.

* மீதமுள்ள எண்ணெயில் கடுகு, உளுந்தம்பருப்பு தாளித்து, அரைத்த துவையலில் சேர்க்கவும்.

* சூப்பரான சத்தான தனியா துவையல் ரெடி.