யாழ். குடாநாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு: மக்கள் முண்டியடிப்பு!

யாழ்.குடாநாட்டில் பெற்றோல் மற்றும் டீசல், மண்ணெண்ணெய் போன்றவற்றுக்கு திடீர் தட்டுப்பாடு உண்டாகியிருக்கும் நிலையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் அலை மோதுகின்றனர்.

பெற்றோல் உள்ளிட்ட எரிபொருட்களுக்கு தட்டுப்பாடு உருவாக போவதாக நேற்றைய தினம் நண்பகல் 12 மணியளவில் தகவல் வெளியான நிலையில் பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் பதுக்கப்படுவதுடன் எரிபொருள் கையிருப்பில் இல்லை என மக்கள் திருப்பி அனுப்பப்படுகின்றனர்.

இதனைத் தொடர்ந்து ஒருசில எரிபபொருள் நிரப்பு நிலையங்களில் மாத்திரம் எரி பொருள் நிரப்பப்படுவதால் மக்கள் எரிபொருளுக்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதனை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.