கிழக்கு தென்ஆப்பிரிக்காவின் க்வாஷுலு-நடால் மாகாணத்தில் உள்ள பட்டோக் நகரத்தில் 25 வயது பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் ஒரு மரக்கம்பெனியில் வேலைப் பார்த்து வந்துள்ளார். இவருக்கு ஏற்கனவே நான்கு வயதில் ஒரு குழந்தை உள்ளது.
இந்நிலையில் தற்போது 2-வதாக ஒரு ஆண்குழந்தை பிறந்துள்ளது. அவருடைய பெற்றோர்கள் 2-வது குழந்தை விரும்பமாட்டார்கள் என்று பயந்துபோன அந்த பெண்மணி, அநத பச்சிழங்குழந்தையை கைவைிட முயன்றார். இதனால் தான் வேலைப்பார்த்த கம்பெனியில் உள்ள ஒரு ஒதுக்குப்புறத்தில் ஒரு பள்ளம் தோண்டி, அதற்குள் குழந்தையை வைத்து மரத்துகளால் மூடிவிட்டார்.
மூன்று நாட்கள் கழித்து அங்கு வேலை செய்தவர்களுக்கு குழந்தை அழுகும் சத்தம் கேட்டுள்ளது. குழந்தை சத்தம் கேட்ட அப்பகுதிக்கு வந்து பார்த்தபொழுது, குழந்தை மரத்துகளால் மூடிக்கிடந்தது தெரியவந்தது. உடனடியாக அவர்கள் குழந்தையை மீட்டுள்ளனர். இதுகுறித்து போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அப்போது தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.







