அதிமுகவில் இருந்து சசிகலாவும் அதிரடி நீக்கம்; ஜெயக்குமார் அதிரடி

தினகரன் குடும்பத்தை ஒதுக்கி வைப்பது என்றால், அதில் சசிகலாவும் தான் அடக்கம் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வறட்சி நிவாரண பணிகளை நிதியமைச்சர் ஜெயக்குமார் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார்,

தினகரன் குடும்பத்தை ஒதுக்கி வைப்பதாக கூறிய தாங்கள் சசிகலா குறித்து ஒரு வார்த்தைகூட பேசவில்லையே என செய்தியாளர்கள் கேட்டதற்கு,தினகரன் குடும்பம் என்றால் அனைவரும் அடக்கம் என்றார்.

மேலும் அவர் கூறியதாவது, தொண்டர்களின் கருத்துக்களைக் கேட்டு டிடிவி தினகரன் குடும்பத்தை கட்சியிலிருந்து ஒதுக்கிய பின்பும், வெவ்வேறு விதமாகவும் புதுப்புது பிரச்சினைகளை ஓபிஎஸ் அணி எழுப்புவதாகக் குற்றம்சாட்டினார்.

தாங்கள் மேற்கொள்வது இரு அணிகளையும் இணைக்கும் முயற்சியல்ல என்றும், பிரிந்துசென்றவர்களை இணைக்கும் முயற்சி என ஜெயக்குமார் கூறியுள்ளார்.